சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பிரிவினை செய்யப்பட்டு, 31.10.1966-ல் பதிவு செய்யப்பட்டது. வங்கி தனது வங்கியியல் சேவையை 17.11.1966-ல் துவங்கியது.வங்கி துவங்கப்பட்ட ஆண்டு முதல், அதாவது 14.12.1966 முதல் வங்கி பணிகளை செய்து வர இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று உங்களது வங்கி செயல்பட்டு வருகிறது. பின்தங்கிய மாவட்டங்கள் என அடையாளம் காணப்பட்ட தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள்,பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் இருக்கும் மக்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர் சங்கங்களுக்கும் குறைந்த வட்டியில் தேவையான நேரத்தில் பல்வேறு கடன் வசதிகளை வழங்கி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்களது வங்கி முக்கிய பங்காற்றி வருகிறது.